தூண் 10 · A1 · அறிக்கை ப. 85manifesto p. 85

நமது ஒவ்வொரு அரசுத் திட்டமும் உறுதியாகவும், நேரடியாகவும் மக்களுக்குச் சென்றடையும் வகையில் இருக்கும். அந்தவகையில், இந்தியாவிலேயே முதன்முதலாக எந்தவித ஆவணங்களையும் வலுக்கட்டாயமாக மக்களிடம் நிரப்பிக்காமல் (No-Application) மக்களுக்கு நேரடியாக மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுசெல்லும் அரசாக நமது அரசு இருக்கும்.Every one of our government schemes will be designed to reach the people firmly and directly. In that way, ours will be the first government in India to bring welfare schemes directly to the people without forcibly requiring them to fill out any documents (No-Application).

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இன்று, அரசின் திட்டங்களை மக்கள் பெறுவதற்குத் தகுதி, விண்ணப்பங்களைச் சரியாகப் பூர்த்தி செய்வது, சமந்தப்பட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொள்வது, அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுப்பது ஆகிய பல்வேறு நிர்பந்தங்கள் ஏற்படுகிறது. இது நியாயமற்ற வகையில் மக்களை ஏமாற்றும் முறையே தவிர, மக்கள்நல அரசியல் கிடையாது. இந்நிலையில், அடுத்த ஐந்திலிருந்து ஏழாண்டுக்குள் நமது த.வெ.க. ஆட்சி, தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்முதலாக எந்தவித 'ஆவணங்களையும் வலுக்கட்டாயமாக மக்களிடம் நிர்பந்திக்காமல் (No-Application) மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தும் மாநிலமாக' முன்னேற்றும். தொழில்நுட்பத்தின் உதவியில் ஆதார், குடும்ப அட்டை, குடும்ப தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை அடங்கிய டிஜிட்டல் தகவல்கள் மூலம், நலத்திட்டங்களுக்குத் தகுதியான நபரைக் கண்டறிவோம். தகுதிவாய்ந்த பயனாளர்கள் எந்தவித விண்ணப்ப நடைமுறையும் இல்லாமல் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள். "முதல்வரின் மக்கள் சேவை நண்பர்" மூலம் திட்டத்தின் பயன்கள் பயனாளர்களின் வீடுத் தேடிக் கொண்டு சேர்க்கப்படும்.Today, to receive government schemes people face various constraints such as eligibility, filling out applications correctly, contacting the relevant office, and bribing officials. This is merely a way of unfairly cheating the people, not welfare politics. In this situation, within the next five to seven years our TVK rule will make Tamil Nadu the first state in India to 'implement welfare schemes without forcibly requiring documents from the people (No-Application)'. With the help of technology, through digital data including Aadhaar, family card, family information and activities, we will identify the eligible person for welfare schemes. Eligible beneficiaries will receive the benefits of schemes without any application procedure. Through the "Chief Minister's People Service Friend", the benefits of the scheme will be sought out and delivered to beneficiaries' homes.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 85)Manifesto promise (p. 85)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏤 நிர்வாகம்Governance 🤝 நலன்Welfare 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital