பனைமரப் பாதுகாப்புPalm tree protection
தமிழ்நாடு அரசின் மாநில மரமாகவும், தமிழர் வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் பனைமரம் அருகிக்கொண்டே வருகிறது. அதை மீட்டெடுக்கும் வகையில், கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். பனைமரம் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கப்படும். மேலும், தமிழ்நாடு பனைமர வளர்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டு 200 கோடி ரூபாய் அதற்கு நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியைப் பயன்படுத்தி பதனீர் பதப்படுத்தல், பனை வெல்லம் உற்பத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பனைப்பொருட்கள் ஏற்றுமதி ஆகியவை திட்டமிடப்படும். பனைப் பொருள் உற்பத்தி இல்லாத பருவங்களில் பனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாழ்வாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.The palm tree, which is the state tree of the Tamil Nadu government and one of the markers of Tamil life, is declining. To revive it, the following schemes will be implemented. The palm tree will be declared a protected tree. Furthermore, a Tamil Nadu Palm Tree Development Corporation will be set up and ₹200 crore allocated to it. Using that fund, processing of palm sap (padaneer), production of palm jaggery, and export of value-added palm products will be planned. During seasons when there is no palm produce, workers engaged in palm-related occupations will be given a livelihood support amount of ₹3,000 per month.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 33)Manifesto promise (p. 33)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.