விண்வெளி தொழில்நுட்பம்; குலசேகரப்பட்டினம் விண்வெளி ஆராய்ச்சி முதலீடுSpace technology; Kulasekarapattinam space research investment
இஸ்ரோவின் புதிய விமான ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் நிலையில், இந்தியாவிலேயே தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக மாற த.வெ.க. அரசு கீழ்க்கண்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ளும். தூத்துக்குடி – திருநெல்வேலி வட்டாரம் இந்தியாவிலேயே முதல் விண்வெளி தொழில்நுட்ப சிறப்பு முதலீட்டுப் பிராந்தியமாக மாற்றப்படும். அடுத்த பத்தாண்டுக்கு இங்கு இது தொடர்பாக முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். செயற்கைக்கோள் (Satellite) & Propulsion System) மற்றும் ட்ரோன் (Drone) சார்ந்த ஸ்டார்ட்–அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி மதிப்பிலான ஸ்கை ஸ்டார்ட் சீட் ஃபண்ட் (Sky Start Seed Fund) உருவாக்கப்படும். அரசின் கட்டமைப்பு உதவி – அரசு சார்பாக விண்வெளி சோதனை மையங்கள் கட்டமைக்கப்படும். விண்வெளி ஆராய்ச்சி தொழில்முனைவோர்கள் இதனை மானிய விலையில் பயன்படுத்திக்கொள்ளலாம். மாணவர்கள் ஆராய்ச்சித் திட்டம் – ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பத்து மாணவர்கள் வடிவமைக்கும் செயற்கைக்கோளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு.With ISRO's new spaceport set to be located at Kulasekarapattinam in Thoothukudi district, the TVK government will undertake the following initiatives to make Tamil Nadu the leading state in space technology in India. The Thoothukudi - Tirunelveli region will be transformed into India's first space technology special investment region. For the next ten years, tax exemption will be granted to those who invest here in this regard. A Sky Start Seed Fund worth Rs.100 crore will be created to encourage Satellite & Propulsion System and Drone-related startup companies. Government infrastructure support - Space testing centres will be built by the government. Space research entrepreneurs can use these at subsidised rates. Students' research project - Government funding allocation for a satellite designed by ten students from an engineering college every year.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 70)Manifesto promise (p. 70)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.