தூண் 7 · E3 · அறிக்கை ப. 62manifesto p. 62

மேற்கு மண்டலம் (கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி)Western Region (Coimbatore, Tiruppur, Erode, Salem, Namakkal, Karur, Dharmapuri, Krishnagiri)

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

• திருப்பூரில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர்: திருப்பூரில் சுற்றுச்சூழலை பாதிக்காதவகையில் பசுமைவழி துணி உற்பத்தியை ஊக்குவிக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். திருப்பூர் ஐஉளியை உலகளவில் சந்தைப்படுத்தும் வகையில் திருப்பூர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும். • கோவையில் ரோபோடிக் மெஷின் மையங்கள்: கோயம்புத்தூரில் பம்புகள், மோட்டார்கள், சி.என்.சி இயந்திரங்கள், வெட் கிரைண்டர்கள் தயாரிக்கும் சிறு-குறு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்தத் தயாரிப்புகளுக்கு உதவும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் அதி நவீன ரோபோடிக் மெஷின் மையங்கள் அமைக்கப்படும். இவற்றை சிறு-குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். • கரூர், நாமக்கல் EV Bus பாடி கட்டும் ஒர்க் ஷாப்கள்: கரூர், நாமக்கல்லில் தற்போது அதிகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பஸ், லாரிகளுக்கு பாடி கட்டும் ஒர்க் ஷாப்கள் உள்ளன. அவற்றை EV வாகனங்களுக்கான பாடிகட்டும் ஒர்க் ஷாப்களாக தரம் உயர்த்தப்பட்டு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். • ஈரோடு ஜவுவல்லரி மற்றும் டிஜிட்டல் டெக்ஸ்டைல் மையங்கள்: ஜவுவல்லரி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்களை மேம்படுத்தும் விதமாக, ஈரோடு Design and Commerce Hub அமைக்கப்பட்டு, அதன் கீழ் 3டி ஜவுவல்லரி பிரிண்டிங் லேப்கள், துணிகளுக்கான டிஜிட்டல் டிசைன் ஸ்டுடியோக்கள் உருவாக்கப்படும். இந்தப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்தும் வகையில், நேரடி இணைய சந்தை உருவாக்கிக் கொடுக்கப்படும். • சேலம் சிறப்பு பொருள் உற்பத்தி மண்டலம்: சேலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு, விண்வெளித்துறை, மருத்துவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் எஃகு உபகரணங்கள் தயாரிக்கும் Special Materials Valley உருவாக்கப்படும். • தர்மபுரி-கிருஷ்ணகிரி மாம்பழ தொழில் வழித்தடம்: தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 5 ஒருங்கிணைந்த மாம்பழ பதப்படுத்துதல் பூங்காக்கள் அமைக்கப்படும். இவற்றில், குளிரூட்டப்பட்ட கிடங்கு, மாம்பழக்கூழ் உற்பத்தி மற்றும் நேரடி ஏற்றுமதி வசதிகள் ஏற்படுத்தப்படும். • ஓசூர் – கிருஷ்ணகிரி மருந்துப் பொருள் உற்பத்தி மண்டலம்: உலக சுகாதார நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டுகளுடன் தரம் மிகுந்த மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவன மண்டலங்கள் ஓசூர் – கிருஷ்ணகிரி பகுதியில் அமைக்கப்படும். • பொள்ளாச்சி தென்னை தொழிற்பேட்டை - மதிப்புக்கூட்டப்பட்ட தேங்காய் பொருட்கள், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தயாரிக்க சிறப்புத் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.• Textile Technology Center in Tiruppur: To encourage green-path textile production in Tiruppur without harming the environment, infrastructure facilities will be upgraded at a cost of 2 thousand crore rupees. To market Tiruppur's apparel globally, a Tiruppur Textile Technology Center will be set up. • Robotic Machine Centres in Coimbatore: In Coimbatore there are numerous micro and small enterprises that make pumps, motors, CNC machines and wet grinders. To support these products, ultra-modern robotic machine centres worth 1000 crore rupees will be set up. Micro and small enterprises can use these for their growth. • EV Bus body-building workshops in Karur, Namakkal: In Karur and Namakkal there are currently many body-building workshops operating for buses and lorries. They will be upgraded into body-building workshops for EV vehicles and 300 crore rupees of funds will be allocated. • Erode Jewellery and Digital Textile Centres: To improve the jewellery and textile industries, an Erode Design and Commerce Hub will be set up, under which 3D jewellery printing labs and digital design studios for fabrics will be created. To market these products globally, a direct online marketplace will be created. • Salem Special Materials Manufacturing Zone: A special economic zone worth 500 crore rupees will be set up in Salem, and a Special Materials Valley will be created to make iron and steel equipment used in the space, medical and defence sectors. • Dharmapuri-Krishnagiri Mango Industry Corridor: 5 integrated mango processing parks will be set up in Dharmapuri-Krishnagiri districts. In these, cold storage, mango pulp production and direct export facilities will be established. • Hosur – Krishnagiri Pharmaceutical Manufacturing Zone: Zones for high-quality pharmaceutical manufacturing enterprises meeting World Health Organization quality controls will be set up in the Hosur – Krishnagiri area. • Pollachi Coconut Industrial Estate - A special industrial estate will be set up to produce value-added coconut products and coconut oil.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 62)Manifesto promise (p. 62)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏭 தொழில்துறைIndustry 📈 பொருளாதாரம்Economy 🏗️ உள்கட்டமைப்புInfrastructure